Posts

Showing posts from April, 2020

டார்ஜீலிங்கில் எனது முதல் நாள்!

Image
தனிமையுடன் மேற்குவங்க-சிக்கிம் பயணம் (பயணக்கட்டுரை) பயணம்: மேற்கு வங்காளம் - சிக்கிம் பகுதி: 04 முதல் நாள் - டார்ஜீலிங்கில் நான்   நான்மாடக் கூடல் நகர் துவங்கி மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் வரை தனியே பயணித்த அனுபவத்தொகுப்பின் நான்காம் பகுதிக்கு உங்கள் அனைவரையும் தாய்தமிழை வணங்கி அன்புடன் வரவேற்கிறேன். தி வில்லேஜ் - ஹோம் ஸ்டே, கூம் ரவியை நான் சந்திப்பது இதுவே முதல்முறை, இருப்பினும் மிகவும் சகஜமாக நடந்துகொண்டார். அவரது நண்பரும் அப்படியே, இருவரும் என் பயணத்தை பற்றி விசாரித்தனர். உடலைத் துளைத்து மனதை தொட்டது அந்த உறையவைக்கும் பனி காற்று. இருள் அனைத்தையும் ஏற்கெனவே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. மெல்ல இருளில் முன்னேறி  நடந்து கொண்டிருந்தோம். கூம் நகரின் மலைச்சரிவில் தேயிலை தோட்டங்களின் மத்தியில் இயற்கை சூழ  அவரது இல்லம் அமைத்திருந்தது. ஆகவே சரிவுப் பாதையில் செல்ல வேண்டியிருந்தது.பாதை சரிவாக இருந்ததால் நடக்க சற்று சிரமமாக இருந்தது மேன்மேலும் புவியீர்ப்பு என்னை முன்னோக்கி தள்ளிக்கொண்டு சென்றது. இருள் - குளிர் - சவாலான பாதை என கடினமாக அமைந்தது அந்த நடைபயணம். பல

டார்ஜீலிங் இமாலய பாரம்பரிய மலை ரயில் பயணம்

Image
தனிமையுடன் மேற்குவங்க-சிக்கிம் பயணம் (பயணக்கட்டுரை) பயணம்:   மேற்கு வங்காளம் - சிக்கிம் பகுதி: 03 டார்ஜீலிங் பாரம்பரிய மலை ரயில் பயணம் பரிந்துரை :   இப்பதிவில் வாசகர்களின் அனுபவத்தை செறிவூட்ட பல்வேறு விழியங்களை (Videos) இணைத்துள்ளேன், செவிப்பொறிகள் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது (Headphones Recommended). டார்ஜிலிங் இமாலயன் இரயில்வே நான்மாடக் கூடல் நகர் துவங்கி மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் வரை தனியே பயணித்த அனுபவ தொகுப்பின் இந்த மூன்றாம் பகுதியில் தேன் தமிழ் சொற்களை திரட்டி மேலும் பல்வேறு விழியங்களோடு வாசகர்களுக்கு சுவாரசியத்தை வழங்க காத்திருக்கிறது. இப்பதிவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன்  வரவேற்கிறேன். சியல்டா இரயில் நிலையத்தின் 9B நடைமேடையிலிருந்து உத்தர பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாரானது. எனது படுக்கையை அடைந்தேன், முழு இரவுப் பயணத்திற்கு தயாரானேன். சன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி பயணத்தை துவங்கினேன். பிறகு கையில்  ஆசிரியர் சு.வெங்கடேசனின் "வைகை நதி நாகரிகம்" என்ற வரலாற்று சான்றுகள் பற்றிய புத்தகத்தை படிக்கத் துவங்கினேன். நேரம் இரவ