Posts

Showing posts from December, 2018

முதல் தேடல்...(இறுதிப்பகுதி)

Image
முதல்   தேடல் .... ( பயணக்கட்டுரை இறுதிப்பகுதி ) பயணம் :   01  வால்பாறை-ஆலப்புழா பகுதி :   02  பயண தூரம் :  1100 கிமீ (சாலைப்பயணம் / நீர்வழிப்பயணம்)             உடலை வருடும் குளிர்த்தென்றல் வீசும் அதிகாலைப் பொழுதில் வென்னீராடிய பின்னர் கையில் ஒரு கோப்பை  தேநீருடன் விடுதியின் முற்றத்தில் ஊஞ்சலில் மெல்ல ஆடியவாறு, பசும்புல்வெளியில் உறங்கும் வெண்பனி துளிகளை ஆதவன் மெல்ல தீண்டியதை ரசித்திருந்தேன்.  வால்பாறை - சாலக்குடி பயணம் கடிகாரம் ஆறு மணியை காட்ட, சிற்றுண்டிக்கு பின் விடுதியில் இருந்து புறப்பட தயாரானேன். மகிழுந்தில் வால்பாறை பேருந்து நிலையம் வரை நண்பர் வந்து வழியனுப்பி விட்டு செல்ல, பேருந்துக்காக காத்திருந்தேன், சற்று நேரத்தில் வால்பாறையில் துவங்கி மலுக்கப்பாறை, அதிரப்பள்ளி வழியாக திருச்சூர் மாவட்டத்தின் சாலக்குடிக்கு செல்லும் தனியார் பேருந்தில் ஏறினேன், சாலை மார்கமாக அந்த அழகிய ஐந்தரை மணிநேர பயணம் சாரல் மழையுடன் துவங்கியது. அடர்ந்த வனத்தின் பசுமையான பள்ளத்தாக்குகள் ஊடே நீண்ட நெடும் பாம்பை ஒத்த சாரல் மழையில் தோய்ந்த சாலையில் பேருந்து ஊர்ந்து செல்ல, சாளரங்களில

முதல் தேடல்...

Image
முதல்   தேடல் .... ( பயணக்கட்டுரை ) பயணம் : 01 வால்பாறை-ஆலப்புழா பகுதி : 01  நாகர்கோவில் துவங்கி வால்பாறை , ஆலப்புழை வரை சென்று திருவனந்தபுரம் வழியே நாகர்கோவிலை மீண்டும் அடைந்த   " என் முதல் தேடல் பயணம்" தேயிலை தோட்டத்தில் நான் வாரயிறுதியில் நாகர்கோயிலிருந்து பேருந்து ஊடே இரவுப்பயணம் மேற்கொண்டேன். மழைச்சாரலோடு என்னை வரவேற்றது பொள்ளாச்சி. பயணம் முழுவதும் முன்னேற்பாடின்றி (தங்குமிடம் தவிர) மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன். பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் ஒன்றரை மணிநேர காத்திருப்புக்கு பிறகு வால்பாறை மார்க்க பேருந்து வந்தது. சில நிமிடங்களில் சாளர ஓர இருக்கையில் அமர்ந்தேன். பேருந்து புறப்படையில் மழை தீவிரமாக கொட்டியது , பேருந்து மெல்ல மலைப்பாதையில் ஏறத்துவங்கியதும் மழையும் சற்றே ஓய்வெடுத்தது. பசுமை பேசும் பள்ளத்தாக்கில் ஆழியாறு அணை நீர்பிடிப்பு பகுதி , பலவண்ண மலர்கள் , பூச்சிகளின் ரீங்காரம் , சிற்றோடைகள் , சாலையோர அருவிகள் என எங்கும் எங்கெங்கும் இயற்கை அன்னை வழங்கிய வளங்களை கண்டு மன களைப்பு களிப்பாய் மாறியது. கூழாங்கல் ஆறு நெடுந்தூர மலைம