Posts

சிக்கிம் - டீஸ்டா நதிக்கரை ஓரத்தில்...

Image
தனிமையுடன் மேற்குவங்க-சிக்கிம் பயணம் (பயணக்கட்டுரை) பயணம்: மேற்கு வங்காளம் - சிக்கிம் பகுதி: 06 சிக் கி ம் - டீஸ்டா நதிக்கரையில்... நான்மாடக் கூடல் (மதுரை) நகர் துவங்கி மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் வரை தனியே பயணித்த அனுபவத்தொகுப்பின் இறுதிப்பகுதிக்கு தேனினும் இனிய தமிழை வணங்கி உங்கள் அனைவரையும் அகமகிழ்ந்து வரவேற்கிறேன். இரவு இதமான மதுவின் மயக்கத்துடன் கதகதப்பான சூழலில் நன்றாகவே உறங்கியிருந்தேன். மறுநாள் காலை எழுந்தவுடன் நிஸ்சல் டார்ஜிலிங் தேநீர் வழங்க அவற்றை அருந்திவிட்டு, உடமைகளை பைகளில் திணித்து புறப்பட தயாரானேன். குறிப்பு மூன்றாவது நாளாக இன்றும் குளிக்கவில்லை காரணமாக அங்கு நிலவிய குளிர். தி வில்லேஜ், கூம் - The Village, Ghoom காலை உணவாக சம்பா மற்றும் பால் அருந்திய பின்னர் புறப்படுவதற்கு முன்பாக "தி வில்லேஜ் - ஹோம்ஸ்டே" இடத்தை சற்றே காலாற சுற்றி நடந்துவிட்டு வந்தேன். அப்போது ரவி ஏதோ ஒரு வகையான பழங்களை பறித்து வைத்திருந்தார். ஃபக் ஃபகே பழம் Fuc Fuckay Exotic Fruit Hangover Fruit அந்த பழத்தின் பெயர் "ஃபக் ஃபகே"

டார்ஜிலிங் நகர வீதிகளில்...

Image
தனிமையுடன் மேற்குவங்க-சிக்கிம் பயணம் (பயணக்கட்டுரை) பயணம்: மேற்கு வங்காளம் - சிக்கிம் பகுதி: 05 டார்ஜிலிங் வீதிகளில்... நான்மாடக் கூடல் (மதுரை) நகர் துவங்கி மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் வரை தனியே பயணித்த அனுபவத்தொகுப்பின் ஐந்தாம் பகுதிக்கு தமிழன்னையை வணங்கி உங்கள் அனைவரையும் பேரன்புடன் வரவேற்கிறேன். டார்ஜிலிங் வீதிகளில்... கூம் நகரில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது டார்ஜிலிங். பகிர் மகிழுந்தில் இருபது நிமிட பயணத்தில் டார்ஜிலிங் ரயில் நிலையத்தை அடந்தேன். ரயில் நிலையத்தை கடந்தது செல்கையில் நேற்று நான் இரயிலில் பயணித்து இங்கு தான் வந்திருக்க வேண்டும் என நினைத்தேன். டார்ஜிலிங் ரயில் நிலையத்தை கடந்து டார்ஜிலிங் நகர பிரதான சந்தை (Market) அருகே என்னை இறங்கிவிட்டனர். அங்கிருந்து சாலை சந்திப்பில் இருந்து வடகிழக்கு நோக்கி நடக்க துவங்கினேன். நகரின் வடக்கு எல்லையை நார்த் பாயிண்ட் (North Point) என்று அழைக்கின்றனர். சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பகுதிக்கு நடந்தே சென்றேன். அந்த நடைபாதையில் நடக்கும் போது "புதிய வானம் - புதிய பூமி" என்ற