டார்ஜீலிங்கில் எனது முதல் நாள்!
தனிமையுடன் மேற்குவங்க-சிக்கிம் பயணம் (பயணக்கட்டுரை) பயணம்: மேற்கு வங்காளம் - சிக்கிம் பகுதி: 04 முதல் நாள் - டார்ஜீலிங்கில் நான் நான்மாடக் கூடல் நகர் துவங்கி மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் வரை தனியே பயணித்த அனுபவத்தொகுப்பின் நான்காம் பகுதிக்கு உங்கள் அனைவரையும் தாய்தமிழை வணங்கி அன்புடன் வரவேற்கிறேன். தி வில்லேஜ் - ஹோம் ஸ்டே, கூம் ரவியை நான் சந்திப்பது இதுவே முதல்முறை, இருப்பினும் மிகவும் சகஜமாக நடந்துகொண்டார். அவரது நண்பரும் அப்படியே, இருவரும் என் பயணத்தை பற்றி விசாரித்தனர். உடலைத் துளைத்து மனதை தொட்டது அந்த உறையவைக்கும் பனி காற்று. இருள் அனைத்தையும் ஏற்கெனவே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. மெல்ல இருளில் முன்னேறி நடந்து கொண்டிருந்தோம். கூம் நகரின் மலைச்சரிவில் தேயிலை தோட்டங்களின் மத்தியில் இயற்கை சூழ அவரது இல்லம் அமைத்திருந்தது. ஆகவே சரிவுப் பாதையில் செல்ல வேண்டியிருந்தது.பாதை சரிவாக இருந்ததால் நடக்க சற்று சிரமமாக இருந்தது மேன்மேலும் புவியீர்ப்பு என்னை முன்னோக்கி தள்ளிக்கொண்டு சென்றது. இருள் - குளிர் - சவாலான பாதை என கடினமாக அமைந்தது அந்...